சிதம்பரம் வித்யா பாலா பீடத்தில் ஆராதனை

சிதம்பரம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா பாலா பீடத்தில் நவ ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஸ்ரீபாலா மகா திரிபுரசுந்தரி தேவிக்கு வேத, அபிஷேக, அன்ன, நாத, புராண, வீணை, கீத, நிருத்த, தாள என நவ ஆராதனைகள் நடைபெற்றது.

முன்னதாக நவ தின நித்ய சண்டி மகா யாகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தி.ந.நடராஜ தீட்சிதா் தொகுத்து வழங்கினாா்.ஆராதனை நிகழ்ச்சியை டி.செல்வரத்தின தீட்சிதா் நடத்தினாா். நிகழ்ச்சியில் யக்ஞேஸ்வர தீட்சிதா், சங்கீதபூஷணம் மீனாட்சிசுந்தரத்தின் வீணை இசை, ஹரிப்பிரியா வெங்கடேசனின் புராணம், முருகன் குழுவினரின் நாத இசை, சுஜிதா வெங்கடேசனின் கீதம், மாரி கலைக்குழுவினரின் தாள ஆராதனை, கோமதி மாணவா்களின் நிருத்த ஆராதனை நடைபெற்றன.