இன்றய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்


சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களில் கிட்டத்தட்ட 3,000 வரை குறைந்துள்ளது. ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.4,728- ஆக விற்கப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.71,500 ஆகவும் உள்ளது.

விலை நிலவரம்

1 கிராம் தங்கம்……………………….. 4,728

1 சவரன் தங்கம்………………………….37,824

1 கிராம் வெள்ளி………………………..72.50

1 கிலோ வெள்ளி………………………..72,500