காட்டுமன்னார்கோவிலில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார்.

விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் அக்ரி பசுமைவளவன், வீராணம் ஏரி பாசன விவசாய சங்கத் தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இளங்கீரனை தாக்கிய காட்டுமன்னார்கோவில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.